| கடந்தேனே சீனபதி நீங்கியல்லோ காலாங்கி நாதருட கிருபையாலும் சுடர்போன்ற மனோன்மணியாள் கடாட்சத்தாலும் சுந்தரனே யஷ்டதிசை துடர்ந்துவந்தேன் திடமான முறைபாடு வழிபாடெல்லாம் தீர்க்கமுடன் குணபாடு தெரிந்துமேதான் சட்டமுடன் காயாதி கற்பங்கொண்டு தாரணியில் நெடுங்கால மிருந்திட்டேனே |