| மகிமையா மின்னமொரு போக்குசொல்வேன் மகத்தான புலிப்பாணி மன்னாகேளு அகிலமெலாந் தான்புகழும் காலாங்கிநாதர் வண்மையுடன் எந்தமக்கு சொன்னநீதி சகிதமுடன் உந்தமக்கு ஞானோபித்து சகலகலை கியானமெல்லாம் உபதேசிப்பேன் விகிதராடீநுக் கருமிகளும் உம்மைப்பற்றி வீரமுடன் நேசமது கொள்வார்பாரே |