| நன்றான செந்தூரம் பதனம்பண்ணு நாதாக்கள் மறைத்துவைத்த செந்தூரந்தான் குன்றான மலைபழுக்கும் நவலோகந்தான் கொற்றவனே கருமிகட்கு மனம்விடாதே தின்றாலும் ஒருவனாடீநு மனதுவந்து தீர்க்கமுடன் மருமமதாயுண்பாயப்பா அன்றெறித்த ஆதிசிவன் உந்தனுக்கு வப்பனே தான்கொடுத்த வேதையாமே |