| ஆச்சப்பா யின்னமொரு பாகஞ்சொல்வேன் அறிவுள்ள சிறுபாலா வன்புள்ளானே ஆச்சரியமானதொரு செப்புதன்னை வப்பனே புலிப்பாணி யறைவேன்பாரு மூச்சடங்கி தானிருந்தேன் நெடுங்காலசித்து மூதுலகில் சமாதிகொண்ட காலாங்கிநாதர் பாச்சலுடன் சீனபதி சமாதிருந்து பட்சமுடன் எந்தனுக்கு உரைத்தவாறே |