| புடமதுவுஞ் சதமென்றால் நூறுபோடு புகழான ரசமணியுங் கட்டும்பாரு தடமதுவும் நடப்பதற்கு இதுவே சித்தி தண்மையுள்ள சூதமது குளிகையாச்சு மடந்தனிலே தானிருக்கும் சிவயோகிக்கு மகத்தான குளிகையது கிட்டிற்றானால் நடராஜ சுந்தரனார் கிருபையாலே நாதாந்த சித்துவெனச் செப்பலாமே |