| கோடியே நாதாந்த சித்துதாமும் குறிப்புடனே சாத்திரங்கள் அதிதஞ்சொன்னார் தேடியே சாத்திரங்கள் தலைவகுத்து செப்பினார் யாதொன்றுங் கண்டதில்லை பாடியதோர் வெகுநூல்கள் கைமறைப்பு பாருலகில் பாடிவைத்தார் சித்தர்தாமும் நீடியே யுந்தனுக்கு வாதங்காண நீதியுடன் போதித்தேன் உண்மைதானே |