| வரிசைபெற நவரத்னமொன்பதுந்தான் வளமைபெற கல்லாணி யாக்கிக்கொண்டு அறிவுடைய சிம்பமதில் அத்திரந்தான் வப்பனே மூலிகையைக் கயற்போலாக்கி புரிசடையோன் தம்பிரான்தன்னைதானும் புகழான தேர்மீதில் உச்சாடித்து சரியுடனே மூலமதிற் தாள்கொண்டுபூட்டி தற்பரனை கள்ளாணி முடிக்கிடாயே |