| பாரேதான் மற்றதுவும் என்னசொல்வேன் பாங்கான வயததுவும் எட்டுமாகும் கூரேதான் நாலுக்கோர் தங்கஞ் சேர்த்து குறிப்புடனே வாரடித்துப் புடத்தைப்போடு நேரேதான் மறுபடியும் உருக்கிப்பாரு நேர்மையுள்ள தங்கமது கூறப்போமோ ஆரோதான் செடீநுவார்கள் இந்தப்போக்கு வப்பனே யுந்தமக்கு வுரைத்தேன்தானே |