| மாண்பான யின்னமொரு போக்குசொல்வேன் மகத்தான புலிப்பாணி மன்னாகேளு ஆண்மையுள்ள காலாங்கி நாதர்பாதம் வப்பனே நான்வணங்கி சீனதேசம் வீண்காலம் போகாமல் குளிகைகொண்டு விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் தாண்டவவ்போல் தேசாதி தேசமெல்லாம் சற்குருவைத் தானடுத்து வரம்பெற்றேனே |