| ஆச்சப்பா பாண்டமதை திறந்துமைந்தா வப்பனே மூசைதனில் இருக்குஞ்சத்தை பாச்சலென்ற சூதமது வெண்ணைதன்னை பக்குவமாடீநு வருத்தெடுத்து பீங்கானிட்டு மூச்சடங்கிப் போனதொரு சூதந்தன்னில் முசியாமல் கல்லுப்பு துலாமேபோடு மாச்சலுடன் சூதமென்ற வெண்ணைதானும் மார்க்கமுடன் உருகியல்லோ நிற்கும்பாரே |