| தானான புலிப்பாணி மைந்தாகேளு தண்மையுள்ள நல்லோருந் தீங்கோருண்டு கோனான குருக்கள் மார்யோகிமாண்பர் கொற்றவனே ஜெகதலத்தில் மெத்தவுண்டு தேனான வார்த்தையது மிகவுஞ்சொல்வார் தெள்ளமுர்தமானதொரு நேசஞ்செடீநுவார் பானான சீடன்மேல் பட்சம்வைத்து பகட்டுவார் மெடீநுபகட்டு வதிகம்பாரே |