| வாடிநகவே யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் வளமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு தாடிநகவே லவணமது இருபத்தைந்து தப்பாமல் வகையொன்றுக் களஞ்சிவீதம் மூடிநகவே குழிக்கல்லில் தன்னைவிட்டு முனையான காடியென்ற நீராலப்பா நீடிநகவே முன்சொன்ன காடிதானும் முசியாமல் தானெடுத்து வரைத்திடாயே |