| இட்டேனே புலிப்பாணி மைந்தாகேளு எழிலான கற்பமதை யாருக்குந்தான் தொட்டகுறி போலாகச் சொல்லிவந்தேன் துரைராஜ சுந்தரனே யுந்தமக்கு விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் விருப்பமுடன் உந்தனுக்கு யுபதேசித்தேன் சட்டமுடன் எந்நாளுங் காலாங்கிபாதம் சதாகாலந்தான் வணங்கிவாழுவீரே |