| கண்டேனே யவரிடமும் குளிகைகொண்டேன் காணவே மற்றொரு வகையுங்கண்டேன் விண்டபொருள் இருபத்தோர் வரையுஞ் சென்றேன் விட்டகுறை இருந்ததுவும் வனைத்துங்கண்டேன் கொண்டல்முடி யச்சுதனார் மூலிகற்பம் கொடிதான சஞ்சீவி யனைத்துங்கண்டேன் சண்டமாருதம்போலே புரவிகற்பம் சாங்கமுடன் கண்டேன் என்றிட்டார்தானே |