| பெற்றேனே சிங்கிந்தா ரிஷிவனத்தில் பேரான குளிகைகற்பம் யானுங்கொண்டேன் கற்றதொரு முதலைகற்பம் யானுங்கொண்டேன் கருவான பச்சைவண்ணப் புரவிகற்பம் வெற்றியுடன் இமயகிரி பர்வதத்தில் வேகமுடன் யேழுவரை சென்றேன்யானும் பற்றியங்ஙன மேலிருந்த தேவர் பாங்கான ரிஷிநாதர் முனிகண்டேனே |