| தந்தேனே என்றுசொல்லி போகர்தாமும் சட்டமுடன் சீனபதிக் கேகியல்லோ அந்தமுடன் சீனபதிப் பெண்களுக்கு யவனிதனில் நடந்ததொரு வதிசயங்கள் சொந்தமுடன் தாமுரைத்து சித்துதாமும் சுந்தரனார் காலாங்கி சமாதிபக்கல் விந்தையது யின்னமிகக் காணவென்று விருப்பமுடன் குளிகையிட்டு சென்றிட்டாரே |