| ஒண்ணாது செந்தூரந் தானுமப்பா வுத்தமனே கோடிவரை யிருக்கலாகும் கண்ணான செந்தூரந் தன்னையப்பா கருத்துடனே பாச்சுகின்ற விதத்தைக்கேளு மண்ணான செம்பதுவும் களஞ்சிநூறு மகத்தான செந்தூரங் களஞ்சியொன்று ஒண்ணாது தானுருக்கி மூசைதன்னில் வுத்தமனே தானெடுத்து சாடீநுத்திடாயே |