| பித்தனென்றால் சொல்லுகிறேன் இன்னங்கேளு பிணிதீர்க்கும் பண்டிதன்போல் பெயர்வகுத்து சுத்தமுடன் காவிகஷாயம்பூண்டு சுந்தரனே யுபதேசங்கூறவல்லோன் சத்திநெறி தவறாத தருமவான்போல் தாரணியில் வேடமது பூண்டுகொண்டு புத்தியுடன் கோபமதை யற்றவன்போல் புலம்பியே திரிவானே கழுதைமாண்பே |