| உண்மையாம் முன்புநயம் புரணிகூறல் வுத்தமரை வுதாசினங்கள் மிகவும்பேசல் நண்மையாம் பெரியோரை பகடிகூறல் நலமுடனே பரிசுத்தோன் போலேகூறல் கண்மையாம் மேன்மேலும் போர்விளைத்தல் கருவான போருக்கு முயன்றுநிற்கல் தண்மையாம் சித்துமுனி நூல்களெல்லாம் தானறிந்த பித்தனைப்போல் பினற்றுவானே |