| இட்டதொரு சாபமதை நீக்கியல்லோ எழிலாக வெந்தனுக்குக் காட்சிதந்து சட்டமுடன் ஞானோபதேசங்கொண்டு சாயுச்சிய பதவிதனைக்காணவென்று திட்டமுடன் மனோலயத்தால் அருளுந்தந்து தீர்க்கமுடன் ஆசீர்மஞ்சாபம்நீக்கி விட்டகுறை இருந்ததொரு நேர்மையாலே விடுதிக்கிப்போகவென வருள்கொள்வீரே |