| பறந்தேனே குளிகையது பூண்டுகொண்டு பாங்கான யிமயகிரி மேற்கேயப்பா சிறந்ததொரு புவனமென்ற கிரியில்யானும் சிற்பரனே குளிகைவிட்டு இறங்கியேதான் நிறைந்ததொரு குகைதனிலே சென்றேன்யானும் நெடிதான தேவரிஷி கோடாகோடி குறைந்ததொரு கணக்கதுவும் லக்கோயில்லை கோடானகோடி சித்துமுனி கண்டேனே |