| பூசித்தேன் அதிதமென்ற நூல்கள்தம்மை புகழான சீனபதி மாண்பருக்கு வாசித்தேன் சந்தேகந் தெளிவுநீங்கி வாகுடனே கருவிகரணாதியந்தம் நேசித்தேன் சீனபதி பெண்களைத்தான் நெடிதான சாத்திரத்தின் மார்க்கங்கண்டு ஆசித்தேன் நெடுங்கால மங்கிருந்தேன் வப்பனே குளிகைகொண்டு பறந்திட்டேனே |