| தொட்டிட்ட மூலியது எந்தன்நாதா துடர்ந்துமே கைதனையே பற்றியல்லோ விட்டு விடாதவர்கரத்தை பிடித்துமல்லோ வீறான நாமிருக்குங் கானகத்தில் சட்டமுடன் கரந்தனையே பற்றியல்லோ சாங்கமுடன் தானிருக்குங் காலந்தன்னில் விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் வீரமுடன் விரல்தனை துண்டிட்டாரே |