| பார்த்தேனே மூலியது மகிமைதன்னை பாண்மையுடன் பிர்மித்து யேங்கும்போது தீர்த்தமுடன் மூலியது வளத்திற்றானும் தீர்க்கமுடன் சிவமாண்பர் கரத்தைப்பற்றி நேர்த்தியுடன் மூலியது தன்னைத்தானும் நேரான வனந்தனிலே இருக்கும்நேர்மை பூர்த்தியுடன் யான்கண்டு திடுக்கிட்டேங்கி புகழாகக் குளிகைகொண்டு வந்திட்டேனே |