| சென்றாரே வனந்தனிலே இருவர்தாமும் சிறப்புடனே பூநீரையெடுக்கும்போது அன்றறிந்த கருஞ்சாரைச் சற்பந்தானும் வப்பனே பூநீற்றை எடுக்கவந்த நின்றிருந்த சிவயோகி மாண்பர்தம்மை நெடுந்தூரந் தான்துரத்தி வருகும்போது குன்றான மலைபோலே விருட்சமப்பா கூறான விருட்சமதில் ஏறிட்டாரே |