| கெட்டதோர் மாண்பர்களின் சாத்திரவண்ணம் கேடறியார் பாடறியார் பயனுங்காணார் நட்டதொரு பயிரதனை களைகள்போக்க நாதாந்த சித்துமுனி சொல்லைப்போல விட்டகுறை இருந்ததொரு மாண்பர்போலே வீணாக வாசைகொண்டு மதியுங்கெட்டு தொட்டலைந்து பூநீராடீநு எடுக்காமற்றான் சேர்ந்துருண்டு வெகுபேர்கள் மாண்டார்தானே |