| கேளேதான் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் கெடியான புலிப்பாணி மன்னாகேளு மீளேதான் பூநீரு எடுப்பதற்கு மீளாமல் வெகுமாண்பர் மாண்டாரப்பா ஆளேதான் வகையறியா மாண்பரப்பா வப்பனே சாத்திரங்கள் படித்துக்கெட்டு சூளேதான் சுடுவாதி மாண்பர்கூடி துறைமுகத்தை காணாமல் கெட்டார்தாமே |