| காட்சியாம் முப்பூவைக் கொண்டபேர்க்கு காசினியில் நரைதிரையும் இல்லையப்பா மாட்சியுடன் நெடுங்கால மிருக்கலாகும் மகத்தான வாசியது மேல்நோக்காது நீட்சியுடன் பதாம்புயத்தை நண்ணலாகும் நிஷ்களங்கமானதொரு சித்தனாவான் மீட்சிபெற வையகத்தில் மாண்பரெல்லாம் மேன்மையுடன் எந்நாளும் துதிப்பார்பாரே |