| எரித்துமே பச்சையென்ற காடிநீரால் ஏற்றமுடன் தானலம்பி ரவியிற்போடு மரித்துமே பிரம்மமென்ற கல்தானப்பா மகத்தான எண்ணையது கக்கிப்போச்சு குரித்தபொருள் பிரமமென்ற சுன்னக்கல்தான் கூரான தேகமது வதிகங்கொண்டு தெரிந்துமே பொடிப்பொடியாம் தகடுபோலாம் வெளிவான சுன்னத்துக் கிடந்தானாச்சே |