| மூடவே ரவியென்ற வெயில்தன்னில் முனையான காடியென்ற பாண்டந்தன்னை நீடியே நாள்தோறும் அருணன்முன்னில் நிலையான பாண்டமதை வெயிலில்வைத்து சாடியென்ற பாண்டமதில் ஜலமுந்தானும் தாக்கான ரவியினிலே சுண்டுமட்டும் கூடியதோர் ஜலமதனைக் காடீநுச்சி மைந்தா கொற்றவனே குறைவுக்கு விட்டிடாயே |