| பாரேதான் ஜெயநீரில் அனந்தம்போக்கு பாடினார் ஜெகதலத்தில் முனிவர்கோடி நேரேதான் குருக்கிடையுங் கருக்கிடையுமப்பா நெடிதான சாஸ்திரங்கள் அனந்தஞ்சொன்னார் வேரேதான் சாஸ்திரத்தி லிந்தப்போக்கு வேதைமுகங் காணுதற்கு குறிகள் சொன்னார் நீரேதான் சாத்திரத்தின் உளவுகண்டு நீதியுடன் ஆராதாரத்தைக் காணே |