| இருக்கவே யின்னமொரு மகத்துவந்தான் எழிலான புலிப்பாணி திலர்தவானே பொருக்கவே காயாதி கொண்டபேர்க்கு பொங்கமுடன் சீவனத்துக் கிடமேதென்றால் திருக்கையிலே தானிருக்கும் சிவனாராணை தீர்க்கமுடன் வாதமது புகலக்கேளும் பெருக்கமுடன் காலாங்கி நாதர்பாதம் பெருமையுடன் யான்வணங்கி கூறுவேனே |