| அன்றான விதியாளி வருவானானால் அவனுக்கே கிட்டுமது மற்றோர்க்கில்லை குன்றான மலைநாடு தேசந்தன்னில் கொற்றவருஞ் சிவயோகி மாண்பருண்டு தென்றிசையில் அகஸ்தியனார் மலையிலப்பா தீரமுடன் சென்றுவந்தோர் கோடியுண்டு வென்றிடவே யவர்களிலுங்கருமியுண்டு வேதாந்த சிவயோகி தானுமுண்டே |