| ஆச்சப்பா யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் வப்பனே புலிப்பாணி மன்னாகேளு மூச்சடங்கி நெடுங்காலங் கொண்டசித்து மூதுலகில் யாரேனுங் கண்டதில்லை பாச்சலென்ற மூறலியது கறுங்கையானாகும் கதிரோனை கண்மறைக்கும் மூலிதானும் மாச்சலென்ற மூலியது வதிதஞ்சொல்வேன் மகத்தான மாற்றதுவும் நூற்றெட்டுமாமே |