| போதிக்க வாதமது யாதென்றாக்கால் போக்கான மலைதோறும் குன்றுதோறும் ஆதித்தன் சந்திரனார் காணாவண்ணம் அகஸ்தியனார் மலைமூலி யனைத்துங்காட்டி வாதிகளு மறியாத மூலிவர்க்கம் வளமையுடன் கிரிமூலி பசிமூலியாவும் வேதிக்கி மூலிகளும் அனைத்துங்காட்டி வேகமுடன் உபதேசஞ்செடீநுதிட்டாரே |