| வந்ததொரு மாண்பரெல்லாஞ் சித்துதம்மை மகதேவர் முன்னிருந்த சித்தென்றெண்ணி சொந்தமுடன் அவர்பாதம் முடிவணங்கி சுந்தரம்மா நெடுந்தூரம் சென்றோமையா அந்தமுடன் சரமாரிபொழிந்துமல்லோ வையனே பிரளயங்கள் அதிகமாகி விந்தையுடன் வந்ததொரு யிடையூர்தன்னால் விசனமுடன் மலையேறி வந்தோம்தாமே |