| தருவேனென்று சித்துமுனி கூறும்போது தகமையுள்ள பொதிமாட்டுக் காரர்தாமும் குருவான சித்துமுனி ரிஷியாரேகேள் கொற்றவரே எங்களுக்கு இன்றுதானும் பருமழையு மின்னலிடி காந்தல்தாமும் பட்சமுடன் வரவழைப்பீர் ஆனாலல்லோ திருவான குருவென்று வும்மைத்தானும் தீரமுடன் எந்நாளும் வந்திப்போமே |