| சென்றவுடன் கோனானும் சாம்பல்தன்னை செம்மலுடன் அவர்பதிக்குக் கொண்டுசென்று பொன்னான மாற்றதுவும் செம்பிலேற புகழான செம்பதுவுந் தங்கமாச்சு மன்னவனைப் போலாகக் கோனான்தானும் மகதேவர் சித்தர்முனி தம்மைப்போலும் தென்னகரி ராமருட செல்வம்போலும் திரளான கோடிவரை பார்த்திட்டானே |