| தானேகேள் அண்டமுனி யறியாக்காடு தகமையுள்ள வனந்தனிலே திரிந்துயானும் மானேகேள் மகமேரு சாரல்பக்கம் மகத்தான குண்ணுகளும் மலையுமுண்டு தேனான மலைதனிலே வாசஞ்செடீநுயும் தேளதுவுந் திரள்கூட்டஞ் சொல்லொண்ணாது கோனான தேளதுவின் கூட்டந்தன்னை தேற்றமுடன் கோடிவரை யான்பார்த்தேனே |