| வருகவே சித்துமுனி தம்மைப்போலே வாகான சீனபதி மாண்பரெல்லாம் பெருகவே கல்லாலின் மரத்தின்மேலே பேரான முன்னிருந்த சித்துபோலே சொரூபமதைக் கண்டவுடன் மரத்தின்பேரில் சுந்தரனே பார்த்துமல்லோ திகைத்துநின்று அருவமென்ன சிங்கமதைக் கண்டுமல்லோ வப்பனே பிரமித்து நின்றிட்டாரே |