| கண்டாரே சித்துமுனி ரிஷியார்தாமும் கானகத்தில் நடந்ததொரு வதிசயத்தை தண்டம்போல் தான்கண்டு பிர்மித்தேங்கி தாரணியில் குளிகைகொண்டு சீனந்தன்னில் வண்ணமுடன் சீனபதி மாண்பருக்கு வளமான வதிசயத்தை யெடுத்துக்கூற திண்ணமுடன் மனதுவந்து மனங்களித்து தீர்க்கமுடன் சீனபதிக்கேகினாரே |