| மண்ணான பூமிதனில் விழுந்தபோது மயக்கமுடன் கண்ணுரங்கி யிருந்தாற்போலும் திண்ணமுடன் மடிந்தார்கள் சித்தரெல்லாம் தீர்க்கமுடன் வையகத்தைக் கண்டதில்லை எண்ணயே மரத்தின்மேல் இருந்தபேர்கள் யெழிலான யிருவருமே யிறங்கியேபின் குண்ணியே முகம்வாடி மனமயர்ந்து குவலயத்தில் மடிந்தவரைக் கண்டார்தாமே |