| சித்தான சித்துமுனி ரிஷிகள்தாமும் சீறலுடன் வருகின்ற சிங்கந்தன்னை புத்தியுள்ள சித்துமுனி பார்த்துயேங்கி புகழான வன்பதுபேர் கூட்டத்தோடும் பத்தியுடன் கல்லாலின் மரத்தின்மேலே பரிவுடனே ஏறியல்லோ பார்க்கும்போது சுத்தியெங்கும் பார்த்துமல்லோ சிங்கந்தானும் சுந்தரனார் அன்பதுபேர் காணலாச்சே |