| இட்டேனே நெடுங்கால மடியேன்தானும் எழிலான காலாங்கி கிருபையாலும் திட்டமுடன் குளிகைகொண்டு கானகத்தில் தீர்க்கமுடன் சுற்றிவருங்காலந்தன்னில் பட்டையம் ஆண்சிங்கம் பெண்ணைக்கண்டு பாச்சலுடன் மோகமது வதிகமாகி சட்டமுடன் கலவிதனில் மிகக்கலந்து சாங்கமுடன் இருக்குமது காலந்தானே |