| திண்ணமா மின்னமொரு மார்க்கம்பாரு தீர்க்கமுடன் புலிப்பாணி மைந்தாகேளு வண்ணமா மேருவுக்கு வடபாகத்தில் மகத்தான கடலோரங் காட்டகத்தில் நண்ணவே சிங்கமதை யானுங்கண்டேன் நாதாக்கள் சித்துமுனி யங்குமுண்டு திண்ணமுடன் குளிகையது கொண்டுமல்லோ தீர்க்கமுடன் வனத்தில் இறங்கினேனே |