| காணவே சத்தகாண்ட மேழினுள்ளே கருவான கடைக்காண்டம் தன்னுக்குள்ளே பூணவே சிடிகையென்ற நுணுக்கமப்பா புகட்டினேன் புலிப்பாணி மைந்தாகேளு ஆணவங்கள் தானொடுங்கி மைந்தாநீயும் வப்பனே சித்தாதி முனிவர்க்கெல்லாம் நாணலுடன் முடிவணங்கி கரங்குவித்து நாற்பாத கமலமதை வணங்குவாயே |