| உரைத்தேனே வெகுநூல்கள் அனந்தங்கோடி வுத்தமனே இந்நூலுக்கொப்பதாமே கரைத்ததொரு பொருள்களெல்லாம் இதிலடக்கம் காசினியில் கண்டவர்கள் விடுவாரோசொல் நரைதிரையும் வருவதில்லை இந்நூல்கண்டால் நாதாக்கள்தான்முதலோர் நாணுவார்கள் சுரையடர்ந்த கரைபோலே யெண்ணவேண்டாம் சுந்தரனே குருநூலாம் மெடீநுநூலாமே |