| தானான சத்தகாண்டந் தன்னைப்போலே சாற்றினார் அகஸ்தியனார் முனிவர்தானும் கோனான பன்னீராயிரந்தானப்பா கொற்றவனே புலஸ்தியருக் குபதேசித்தார் பானான பனிரெண்டு காண்டஞ்சொன்னார் பாலகனே வாயிரத்துக்கொருகாண்டந்தான் தேனான மனோன்மணியாள் கிருபையாலே தேற்றமுடன் பாடிவைத்த நூல்தான்பாரே |