| பண்பான வறுவகை காண்டத்துள்ளே பலகோடி வேதைமுகம் அனந்தஞ்சொன்னேன் நண்பான நாதாக்கள் நீதிமார்க்கம் நலமுடனே யாரேனுஞ் சொன்னதில்லை திண்பான நீதிவழிக்குறியசித்தை தீர்க்கமுடன் பாடிவைத்தேன் இந்நூலுக்குள் வன்பான பெருநூல்தான் குருநூலாகும் வண்மையுடன் பாடிவைத்தேன் காண்டமாமே |