| பாரேதான் சத்தகாண்டந் தன்னிற்குள்ளே பாங்கான லோகவதிசயங்களெல்லாம் நேரேதான் ஆறாவதானகாண்டம் நெடிதான காண்டமிது குருநூலாகும் தீரேதான் கடைகாண்டம் ஏழாங்காண்டம் தீர்க்கமுடன் இன்னவதிசயங்கள்கூறும் சீரேதான் காலாங்கி கடாட்சத்தாலே சிறப்புடனே பாடிவைத்தேன் பெருநூல்தானே |